சாத்வீகன்

எனது வானத்திற்கு கீழே...

Friday, May 11, 2007

நசுக்கப்பட்ட விரல்கள்

உண்மையில் நிகழ்ந்ததாக சொல்லப்படும் கதை இது. (உண்மையான நிகழ்வா என்பது கேள்விக்குரியது.)

புத்தம் புதியதாக கார் வாங்கியிருந்தான் அவன். அதன் புதிய மெருகின் மீது மெத்த கர்வம் கொண்டிருந்தான்.

ஒருநாள் வெளியே கார் நிற்கும் இடத்தை கண்ணுற்ற அவன் அதிர்ந்தான்.

அவனது மூன்று வயது மகன் சுத்தியலால் காரை தட்டிக் கொண்டிருந்தான். கார் சொட்டையாகி கொண்டிருந்தது.

கோபம்.. கட்டுங்கடங்காத கோபம்.

மகனின் கையிலிருந்து சுத்தியலை பிடுங்கினான்.

"இந்த கைதானே சுத்தியால் காரை நாசமாக்கியது" என்று கத்தியவாறு சிறுவனின் கைகளை இழுத்து வைத்து சுத்தியால் நசுக்கினான்.

கோபம் தீர்ந்தது. சிறுவனின் விரல்களில் இரத்தம்.

"ஐயோ என்ன.. செய்தேன்." அதிர்ந்தான்.

மகனை மருத்துவனைக்கு கொண்டு சென்றான்.

நசுக்கப்பட்ட விரல்களை நீக்குவதை தவிர வேறு வழியில்லை என்று மருத்துவர் குழு முடிவெடுத்தது. விரல்கள் வெட்டப்பட்டன.

மகனின் படுக்கையருகே அமர்ந்து அவன் அழுது கொண்டிருந்தான்.

"சாரிப்பா. நான் செஞ்சது தப்பு. காரை சரி செஞ்சிடலாம் இல்லையா..." மகன் தன் கைகளை பார்த்தான்...
"இந்த விரல்லாம் திரும்பியும் வளர்ந்துடும் இல்ல"...

அவனால் தாங்க முடியவில்லை. அன்றே தற்கொலை செய்து கொண்டான்.

-------------------------

ஆத்திரத்தில் அறிவிழந்து பிறரை துன்புறுத்துவதன் மூலம் நாம் சாதிப்பது எதுவுமில்லை.
மாறாக அந்த வலி நம்மைத்தான் வந்து அடையும்.



வள்ளுவம்:


சினத்தை பொருளென்று கொண்டவன் கேடு
நிலத்தறைந்தான் கைபிழையா தற்று.


-----------

3 Comments:

Blogger G.Ragavan said...

இதை மின்னஞ்சலில் படித்திருக்கிறேன். குழந்தைகள் குழந்தைகள். ஆயிரம் குறும்பு செய்தாலும் அவை குழந்தைகள். அந்தக் குழந்தையின் கேள்விக்கு விடையுண்டா? அதனால்தான் தற்கொலை செய்தார் தந்தை. சற்று சிந்தித்திருப்பாரேயானால் இருவரும் சுகமாக வாழ்ந்திருப்பார்கள். அன்பின் வழியது உயிர்நிலை.

12:46 PM  
Blogger Geetha Sambasivam said...

நிஜமா இது? நம்பவே முடியலை! ரொம்பவே வருத்தத்துக்கு உரிய செய்தி. மனதே கனத்துப் போகிறது.

2:10 PM  
Blogger துளசி கோபால் said...

அய்யய்யோ..குழந்தைக்குக் கை போச்சா?

ஆத்திரம் ( அறிவுக்) கண்ணை மறைச்சிரும்ன்றது எவ்வளவு உண்மை பாருங்க.

பாவம், அந்தப் பிஞ்சுக் குழந்தை(-:

கார், விரல்னு பார்த்ததும் மனசு அப்படியே பதறிப்போச்சு.

2:21 PM  

Post a Comment

<< Home