மகர சங்கராந்தியும் பூமி உருண்டையும்.
மகர சங்கராந்தி என்றால் என்ன?
பொங்கல் மகர சங்கராந்தியாகவும் கொண்டாடப் படுவதாக நாம் அறிவோம்.
சூரியனின் பாதையை காலம் காலமாக கவனித்து வந்த நம் முன்னோர் அது குறிப்பிட்ட காலத்திற்கு தெற்கு நோக்கி நகர்வதை கவனித்தனர்.
அவ்வாறு சூரியன் தெற்கு நோக்கி தொடர்ந்து சென்று ஒரு குறிப்பிட்ட நாளில் தனது தெற்கு பயணத்தை நிறுத்தி மீண்டும் வடக்கு நோக்கி நகர்வதை கவனித்தனர்.
அவ்வாறு தெற்கு நோக்கிய சூரியனின் பயணம் தஷிணாயணம் என்றும் பிறகு சூரியனின் வடக்கு நோக்கிய பயணம் உத்தராயணம் என்றும் அழைக்கப்படுகிறது.
இவ்வாறு சூரியன் தனது பாதையில் சென்று மகர ரேகையை சந்திக்கும் நாள் மகர சங்கராந்தி ஆகும். (பார்க்க படம்)
அறிவியல் ரீதியாக பார்த்தால் பூமி தனது அச்சில் இருபத்தி மூணரை பாகை சாய்ந்திருந்து சூரியனை சுற்றுவதால் கடக ரேகையில் உள்ள இந்திய துணைக்கண்டத்தில் இருக்கும் நாம் சூரியன் பெருமளவு தெற்கு நோக்கியே சென்று உதிக்க காண்கிறோம்.
தென் திசையில் சூரியன் தான் உதிக்கக் கூடிய கடைசி இடத்ததை (மகர ரேகையை) அடையும் நாளே மகர சங்கராந்தி.
இம் மகர சங்கராந்தியில் சூரியன் தனது தட்சிணாயணத்தை முடித்து உத்தராயண பயணத்தை துவங்குகிறான்.
உத்தராயணம் புண்ணிய காலமாகும். (மகா பாரதத்தில் பீஷ்மன் உத்தராயண புண்ணிய காலத்திற்காக காத்திருந்து பின்னர் உயிர் நீத்தார் என்று அறிகிறோம்.)
என்ன நாளை எழுந்ததும் சூரியன் தென்மேற்கில் உதிக்கின்றானா (!!!!!) என்று பார்ப்பீர்கள் தானே :)
8 Comments:
சாத்வீகன்!
ஏனுங்க அழகாக "தைப்பொங்கல்" என்று சொல்வதில் என்ன ? சிரமம் கண்டீர்கள். வலிந்து ஏன்? இந்த வாந்தி. ஆண்டு தோறும் ஏன்? இந்த வாந்தியை ஞாபகமூட்டுகிறீர்கள்.மற்றும் சங்கரர் இதுக்குள் ஏன்? நுளைந்தார். புரியவில்லையே??
யோகன் பாரிஸ்
அன்பு யோகன் பாரிஸ்,
தித்திக்கும் தைப்பொங்கல் தமிழகம் தாண்டி இந்தியாவின் மற்ற பகுதிகளில் மகரசங்கராந்தியாக கொண்டாடப் படுகிறது.
பொங்கலின் பெருமையை அனைவரும் சொல்லியபின் இந்திய அளவில் கொண்டாடப்படும் இத்திருநாளின் இன்னொரு வடிவை சொல்வோம் என்றே இந்த பதிவிட்டேன்..
சங்கராந்திக்கும் சங்கரருக்கும் சம்பந்தம் ஏதுமில்லை.
சூரியன் மகரத்தைில் சங்கமிப்பதே மகர சங்கராந்தி... (மகர சங்கமம்)
இதன் பிண்ணனியில் வானியலை உற்று நோக்கிய முன்னோர்களின் அறிவியல் திறமை தெரிந்த காரணத்தால் இதனை பதிவிட்டேன்.
அயனச்சேர்க்கை என்று பூகோள பாடத்தில் படிக்கும் ஒரு நிகழ்வு வடக்கில் பண்டிகையாகவே கொண்டாடப்படுகின்றதை பதியலாம் என்று தோன்றியது.
ஓப்பு நோக்க சிறு படத்துடன் பதிவிட்டேன்.
பொங்கலின் இன்னொரு வடிவத்தை சொல்லும் எந்த வித காழ்ப்புணர்வும் இல்லாத இப்பதிவு தங்களுக்கு வாந்தியாக தெரிவது எனக்கு ஆச்சரியமளிக்கிறது.
இனிய பொங்கலுக்கு வாழ்த்து சொல்லி இடப்பட்ட பொங்கல் நல்வாழ்த்துக்கள் சொன்ன என் முந்திய பதிவினை தாங்கள் பார்க்கவில்லை போலும்.
தங்களுக்கு இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்.
தமிழ் படத்துடன் விளக்கம் அருமை.
//பொங்கலின் இன்னொரு வடிவத்தை சொல்லும் எந்த வித காழ்ப்புணர்வும் இல்லாத இப்பதிவு தங்களுக்கு வாந்தியாக தெரிவது எனக்கு ஆச்சரியமளிக்கிறது.
//
எனக்கும் தான், அதுவும் - யோகன் பாரிஸ் - அவரிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை.
நன்றி ஜீவா..
இது பொங்கல் பற்றிய பதிவு இல்லை. மகர சங்கமம் பற்றிய "அறிவியல்" பதிவு. புரிதலுக்கு நன்றி.
//என்ன நாளை எழுந்ததும் சூரியன் தென்மேற்கில் உதிக்கின்றானா என்று பார்ப்பீர்கள் தானே ?//
இது சரிதானா?
//என்ன நாளை எழுந்ததும் சூரியன் தென்மேற்கில் உதிக்கின்றானா என்று பார்ப்பீர்கள் தானே ?//
தென்மேற்கில்லை, தென்கிழக்கு.
கொத்தனார்... பத்மகிஷோர்..
தென்கிழக்கு என்பதே சரி... நன்றி
அது வந்து சூரிய உதயத்தையே பாராது சூரிய அஸ்தமனங்களை மட்டுமே கண்டு பழகியுள்ள என் கண்களின் கோளாறு :)))
முதல் பின்னூட்டம் நமக்குப் பழக்கமான வலைப்பதிவர் johan-paris (யோகன் பாரிஸ்) அவர்கள் எழுதியது போல இல்லை. அவர் பெயரில் வேறு யாரோ பின்னூட்டமிட்டு உள்ளதாக ஐயம் எழுகிறது. :-(((
Post a Comment
<< Home