சாத்வீகன்

எனது வானத்திற்கு கீழே...

Wednesday, December 13, 2006

குழந்தை கண்ணன் என்றால் குறும்பல்லவா


குழந்தை கண்ணன் என்றால் குறும்பல்லவா
அழகான அவன் செயல்கள் அமிழ்தல்லவா..


பழகவே அவனும் நல்ல தோழனல்லவா
வழங்கும் தமிழில் நானும்அதை சொல்லவா...

(குழந்தை கண்ணன்..)

வெண்ணை பானை உடைத்து சிரிக்கின்றான்
உண்டிவில் கொண்டு தயிர்பானை தகர்க்கின்றான்
அண்ணன் பலராமன் பலசொல்லி கேளாதவன்
கண்ணன் குறும்புகளில் என்றும் குறையாதவன்

(குழந்தை கண்ணன்..)

அரக்கரை அழித்திடவே அவனும் வந்தான்
அரவம் ஒன்றின்மேல் நடமாடி நின்றான்
உரலொன்றில் அன்னைதான் கட்டி வைத்தால்
மரம்மோதி ஆங்கே மோட்சம் தந்தான்.

(குழந்தை கண்ணன்..)

தின்ன இவன் மண்கொண்டான் என்றே

அன்னை கேட்க வாய்திறந்து வையகம்
தன்னை காட்டியவன் மயங்க வைத்தான்.
இன்னும் என்னென்ன இவனே செய்வான்.

குன்றொன்றை அவனும் குடையாய் கொண்டான்
கன்றுபசுக்கள் யாவிற்கும் அபயம் தந்தான்.
இன்றுஇக் கண்ணன் யாது செய்வான்
என்று யாவரையும் நோக்கச் செய்தான்.

குழந்தை கண்ணன் என்றால் குறும்பல்லவா
அழகான அவன் செயல்கள் அமிழ்தல்லவா...




9 Comments:

Blogger குமரன் (Kumaran) said...

கண்ணன் பாட்டு பதிவில் வரவேண்டிய பாடல் அல்லவா இது சாத்வீகன்? :-)

1:49 PM  
Blogger Kannabiran, Ravi Shankar (KRS) said...

அதானே
குறும்பு போட்டிக்குக் கொடுத்தாலும், கண்ணன் பாட்டு வலைப்பூவில் வரவேண்டியதாச்சே!
சரி, சாத்வீகன்; இதை அப்படியே உங்கள் தேன் குரலில் பாடி, ஆடியோ ஃபைலை அனுப்பி வைங்க!:-)

4:51 PM  
Blogger சாத்வீகன் said...

நன்றி குமரன், கண்ணன் பாட்டு பதிவில் பாடலுடன் ஒலி மற்றும் ஒளி அல்லவா.

நன்றி ரவிஷங்கர்,
நமக்கு தொழில் கவிதை. பாடுதல் அறியோம்.
எனவே தாங்கள் கேட்டது போல் பாடித்தர இயலாமைக்கு வருந்துகிறேன்.

சாத்வீகன்

4:31 AM  
Blogger மெலட்டூர். இரா.நடராஜன் said...

நல்ல கவிதை. கண்ணன் பாட்டுக்கள் எக்காலத்துக்கும் இசைவாக இருக்கும். உங்கள் கற்பனை இன்னும் பொங்கி வழியட்டும்.

8:57 AM  
Blogger குமரன் (Kumaran) said...

சாத்வீகன்.

'கண்ணன் பாட்டு' வலைப்பூவில்

வரி (lyrics)

ஒலி (audio clips)

ஒளி (video clips)

மூன்றுமே வரும். தங்கள் அனுமதியிருந்தால் இந்தப் பாடலையும் அங்கே இடலாம்.

10:48 AM  
Blogger சாத்வீகன் said...

நன்றி குமரன்,

கண்ணன் பாடல் பதிவில், இப்பாடல் இடம் பெற்றால் மெத்த மகிழ்வேன்.

மிக்க நன்றி.

11:36 AM  
Blogger நாமக்கல் சிபி said...

ரொம்ப அருமையா இருக்கு சாத்வீகன்...

ஒவ்வொரு வரியுலிம் கண்ணன் கண் முன்னே நிற்கிறான்...

நல்ல பாடலுக்கு மிக்க நன்றி!!!

12:12 PM  
Blogger சாத்வீகன் said...

Melattur Ramachandran Natarajan

மிக்க நன்றி.

3:24 PM  
Blogger சாத்வீகன் said...

நன்றி திரு வெட்டிப்பயலார் அவர்களே...

மீண்டும் வருக.. :))))

3:25 PM  

Post a Comment

<< Home