கேசினோ ராயல் - ஜேம்ஸ்பாண்டு 007
கேசினோ ராயல்
டேனியல் கிரெய்க் நடித்தது.
நவம்பர் 17ம் தேதிமுதல் திரையிரங்குகளில்.. அடுத்த நாளே பார்த்தாயிற்று.. அதைப்பற்றி வலை பதியாவிட்டால் நன்றாக இருக்குமா...
பியர்ஸ் பிராஸ்னனையே தொடர்ந்து ஜேம்ஸாக பார்த்ததனால், போட்டோக்களில் டேனியல் கிரெய்க்கை ஜேம்ஸ்பாண்டாக ஏற்பது கடினமாக இருந்தது..
ஆனால் திரையில் மனிதர் பின்னுகிறார்...
நடிப்பு அபாரம்...
பிராஸ்னன் படங்கள் யாவிலும் ஜேம்ஸ்பாண்டை விடவும் அவரது உபகரணங்கள், பிரம்மாண்டமான கதை வலுவாக இருக்கும்.
இந்த படம் முற்றிலும் மாறாக இருந்தது.
ஐயான் பிளம்மிங்கின் மூல நூலான கேசினோ ராயலையே தழுவி எடுக்கப்பட்ட படம்..
ஜேம்ஸ் பாண்டு படங்களை அதன் பிரம்மாண்டம், துரத்தல் காட்சிகளுக்காகவே பார்ப்பவர் நீங்கள் என்றால் இந்தப் படம் உங்களுக்கானதல்ல...
கதையின் துவக்கத்தில் ஜேம்ஸ்பாண்டு கொலை செய்து 00 அந்தஸ்தை பெறுகிறார். படத்தின் பெயர்பட்டியல் ஓட துவங்குகிறது படம்..
எடுத்த எடுப்பில் மடகஸ்கரில் வில்லனின் அடியாளைத்துரத்தும் ஜேம்ஸ்.. கிரேனில் ஏறி ஓடும் காட்சிகள், தாவி ஓடும் வில்லனின் அடியாள்... வாவ் அபாரம்..
பிறகு ஜேம்ஸ் தொடர்ந்து வில்லனின் மற்றொரு அடியாள் டிமிட்ரியாஸின் நடவடிக்கைகளை கவனிக்கிறார்.. டிமிட்ரியாசின் நடவடிக்கைகளை அவன் மனைவி மூலம் அறிகிறார். (ஜேம்ஸ் எவ்வாறு அதை அறிவார் என்பது அனைவரும் அறிந்ததே)
டிமிட்ரியாஸை தீர்த்து கட்டும் ஜேம்ஸ் பிறகு ஒரு விமானத்தகர்ப்பை சாகசங்கள் செய்து தடுத்து நிறுத்துகிறார்.
இதன் பின்னால் இருக்கும் வில்லன் யார். யார் இதையெல்லாம் செய்கிறார்கள்...
லே சிஃப் (வில்லன்) சர்வதேச பயங்கரவாதிகளுக்கு பணம் கொடுத்து வாங்குபவன். அவனுடைய பணம் சேர்க்கும் திட்டமே இது என தெரிய வருகிறது..
கடும் பணப்பற்றாக்குறையில் இருக்கிறான் லே சிஃப். அவன் யாருக்கு பணம் தர வேண்டுமோ அவர்கள் அவனை நெருக்குகிறார்கள்.
பணம் சேர்க்க தனக்கு கைவந்த கலையான சீட்டாட்டத்தில் இறங்குகிறான் லே சிஃப். அதை தடுத்து நிறுத்தி அவனை தோற்கடிக்க தோதான ஆள் என கண்டறியப்பட்டு களமிறக்கப் படுகிறார் ஜேம்ஸ்..
ஜேம்ஸ் சீட்டாட வேண்டிய பணத்தை அவருக்கு தர நியமிக்கப் படுகிறாள் வெஸ்பர் லிண்ட் (எவா க்ரீன்). முதல் பார்வையிலேயே இருவருக்குள்ளே காதல் மலர்கிறது...
அடுத்து வரும் காட்சிகளில் சீட்டாட்டமும், வில்லனை துரத்தும் கடன்காரர்களுடன் ஜேம்ஸ் சண்டையும்..
ஜேம்ஸை ஆட்டத்திலிருந்து துரத்த விஷம் கொடுக்கிறான் வில்லன். காப்பாற்றுகிறாள் வெஸ்பர். ஆட்டத்தை தொடரும் ஜேம்ஸ் வில்லனை தோற்கடிக்கிறார்.
ஆட்டத்தில் வென்ற ஜேம்சையும் வெஸ்பரையும் கடத்தி மிரட்டி பணம் கேட்கிறான் வில்லன். வில்லனின் சித்தரவதையில் மயங்கி சாய்கிறார் ஜேம்ஸ்.
லே சிஃப்பின் கடன்காரர்கள் அவனை தீர்த்துகட்ட, ஆஸ்பத்திரியில் கண்விழிக்கிறார் ஜேம்ஸ்.
வெஸ்பர் மீது கொண்ட காதலால் வேலையை ராஜினாமா செய்கிறார். ஜேம்ஸ் வென்ற பணம் சேர வேண்டிய இடத்தில் சேரவில்லை.
வெஸ்பர் பணத்தை யாரிடமோ கொடுக்க செல்வதை பார்க்கும் ஜேம்ஸ் பின்தொடர்கிறார். பிறகு வெனிஸ் நகரில் ஒரு கட்டத்தில் நடக்கிறது சண்டை. கட்டிடமே இடிந்து நீரில் விழ ஜேம்ஸ் வெஸ்பரை காப்பாற்ற முயல, வெஸ்பர் லிஃப்டில் தன்னைத்தானே பூட்டிக்கொண்டு நீரில் மூழ்கி இறக்கிறாள்.
லே சிஃப்பை கொன்ற வொயிட்டிடம் இருந்து தன்னை காக்கவே வெஸ்பர் பணத்தை கொண்டு சென்றாள் என அறியும் ஜேம்ஸ் கதறி அழுகிறார்.
வொயிட்டை தேடிப்பிடித்து காலில் சுட்டு "என் பெயர் பாண்டு, ஜேம்ஸ்பாண்டு" என ஜேம்ஸ் சொல்ல முடிகிறது படம்.
பிரம்மாண்டங்கள் படத்தில் உண்டு என்றாலும் முந்தைய படங்கள் போல அல்ல.. ஜேம்ஸ்பாண்டின் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட படம். பார்க்க வேண்டிய படம்.
13 Comments:
மேலும் தகவல்கள்
Casino Royale
Language: ENGLISH
Genre: Action
Director: Martin Campbell
Producer: Anthony Waye, Callum McDougall, Barbara Broccoli
Cast: Daniel Craig, Eva Green, Mads Mikkelsen, Judi Dench, Jeffrey Wright, Giancarlo Giannini, Caterina Murino
Screenplay: Neal Purvis, Robert Wade, Paul Haggis, Ian Fleming
Vimsrsanam Super !!!
போஸ்டரை பார்த்துவிட்டுபார்க்கவேண்டாமா வேணுமா என நினைத்துக்கொண்டிருந்தேன். பார்க்க வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்திவிட்டீர்கள்
செந்தழல் ரவி, நீலகண்டன், saravanan நன்றி.
saravanan ஆம் பிரம்மாண்டமான ஜேம்ஸ்பாண்டு படத்தை எதிர்பார்த்தே நானும் சென்றேன். படம் வித்தியாசமாக இருந்ததோடு எனக்கு பிடித்திருந்தது. முன்னரே சொன்றாற் போல் பிரம்மாண்டத்தை மட்டும் எதிர்பார்ப்போரை இப்படம் ஏமாற்றமே அடைய செய்யும்.
நன்றி.. சுருக்கமாக அழகான பதிவிற்கு, படம் பார்க்கும் ஆவளை தூண்டி விட்டீர்கள்.
சொல்ல மறந்துட்டேனே.., நான் தமிழில் தான் பார்க்கப்போறேன். ஆங்கிலத்தில் பார்த்தால் வசனங்களை சொல்லித்தர எனக்கு ஆள் இல்லை.
:-))))
படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. பாண்ட் வரிசைப் படங்களிலேயே சிறப்பான படமாக அமைந்திருக்கிறது. ஆனால் Mr Qவை கடைசி வரை காண்பிக்கவே இல்லை என்பது தான் வருத்தம்.
யெஸ்.பாலபாரதி நன்றி...
புரிவதற்காக தமிழில் ஜேம்ஸ்பாண்ட் படம் பார்ப்பது நன்றுதான். ஆனால் மொழி மாற்றத்தின் தரம்... முந்தைய படங்களில் ஜேம்ஸ் பேட்டை தமிழில் பேசுவது காமெடியாக இருக்கும்...
இந்த படத்தை நான் ஆங்கிலத்தில் பார்த்தேன்.. தமிழில் எப்படி இருக்கும் என்று தெரியவில்லை...
செந்தில் குமரன்,
Mr Q மட்டுமல்ல முதல் தடவையாக ஜேம்ஸ்பாண்ட் படத்தில் மணி பென்னியும் இல்லை.
வருகைக்கு நன்றி
ஒரு முக்கால் படம் மட்டுமே பார்த்தது போல இருந்தது. சேது பட ஸ்டைலில் 'சட்'டென்று முடித்து விட்டார்கள்.
படத்தில் குறிப்பிடப்பட வேண்டிய அம்சம், முதல் துரத்தில் அந்த அடியாளின் body language-ம் அவன் அட்டகாசமான ஓட்டமும். பின் அந்த விமானக் கடத்தல்.
வழக்கமாக வரும் இத்யாதி கதாபாத்திரங்கள் இங்கே காலி. Mr.Q படத்தில் இல்லை. பழைய Q-க்கு என்ன ஆயிற்று? போன படத்தில் கூட அவர் இல்லை, வேறு ஒருவர் ஃபுரொமோஷன் ஆகியிருந்தார். பழைய Q தான் அதிகமான 007 படங்களில் நடித்திருப்பார். காரணம், கருப்பு வெள்ளை 007 படங்களிலும் அவர் இருக்கிறார்.
காருக்கு இங்கே அதிக வேலை இல்லை. M-ன் கதாபாத்திரமும் வெகு குறைவே. Die another day மாதிரி இதிலும் 007 அதிகமாக அடி வாங்குகிறார். நாற்காலியில் அமர வைத்து அவர் அடி வாங்கும் காட்சி!!!
//சொல்ல மறந்துட்டேனே.., நான் தமிழில் தான் பார்க்கப்போறேன். ஆங்கிலத்தில் பார்த்தால் வசனங்களை சொல்லித்தர எனக்கு ஆள் இல்லை.
:-))))//
அட பாலா! நேத்து தியேட்டருக்கு போய், அடுத்தவங்க சிரிச்சா நானும் சிரிப்பேன். அதனால தமிழில் ஒரு முறை பார்க்கவேண்டும்.
மற்றபடி 007 படங்களில் இருந்து தலை கீழ் மாற்றம்.
டிவிடி வந்தபிறகு பார்க்கலாமென்றிருக்கிறேன். :)
எனக்கென்னமோ 007என்றால் அது ஷான் கானரிதான். அதற்குப்பிறகு பியர்ஸ் ப்ராஸ்னன். ஆனால் டானியல் கிரெய்கை ம்யூனிக்கிலும் சில்வியாவிலும் பிடித்திருந்தது.
சீனு வருகைக்கு நன்றி..
//சேது பட ஸ்டைலில் 'சட்'டென்று முடித்து விட்டார்கள்
முடிவில் கதாநாயகி இறந்ததும் சோகமாக திரும்பும் கதாநாயகன். நல்ல ஒப்புமை.
//காருக்கு இங்கே அதிக வேலை இல்லை.
கார்தான் இறக்க இருக்கும் ஜேம்ஸை காப்பாற்றுகிறது. ஆனால் காரில் துரத்தல் காட்சிகள் இல்லை. ஆனால் அதே கார் பல்டி அடிக்கும் காட்சி பலே.
மதி கந்தசாமி (Mathy) அவர்களே வருகைக்கு நன்றி..
தங்கள் திரைப்பக்கங்களை நான் அவ்வப்போது படிப்பதுண்டு. தரமான பதிவுகள்.
//ஆனால் டானியல் கிரெய்கை ம்யூனிக்கிலும் சில்வியாவிலும் பிடித்திருந்தது.
அந்த படங்களை நான் பார்த்ததில்லை. நீங்கள் சொன்னால் நன்றாய்தானிருக்கும்.
Post a Comment
<< Home