வெய்யோனொளி வெட்கித் தோற்கும் முகவழகே
வெய்யோனொளி வெட்கித் தோற்கும் முகவழகே
செய்யும் செயல்யாவும் நின்கருணை கொண்டே
மெய்யாய் உன்புகழ் கூறும் அடியவர்க்கே
உய்யும் வழியுணர்த்தும் உன்பெயரே
பைந்தமிழில் யாண்டும் உனைப்பாட நானுவந்தேன்
செந்தமிழில் மனம் மகிழழும் திருக்குமரா
கந்தா என்கவியாவும் நான்சாற்ற நீஏற்பாய்
எந்தை இறைவா எந்நாளும்
செந்தழல் விளைந்த செல்வத் திருக்குமரா
விந்தைபல விளைத்திடும் வெற்றி வேலழகா
சிந்தையில் சதிராடும் வள்ளி மணாளா
தந்திடும் எனக்கே தமிழ்.
4 Comments:
வெண்பா வடிப்போர் சங்கத்தில் சேர்ந்துடுங்க! இலவச்க்கொத்தனார் தான் நடத்துகிறார்!
//தந்திடும் எனக்கே தமிழ்//
"சங்கத்தமிழ் மூன்றும் தா" மாதிரியே கோரிக்கை வைக்கறீங்களே! :-)
ஆஹா! அற்புதம் சாத்வீகன்!
ஷைலஜா
கண்ணபிரான், ஷைலஜா வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
//வெண்பா வடிப்போர் சங்கத்தில் சேர்ந்துடுங்க! இலவச்க்கொத்தனார் தான் நடத்துகிறார்!
//"சங்கத்தமிழ் மூன்றும் தா" மாதிரியே கோரிக்கை வைக்கறீங்களே! :-)
கண்ணபிரான், கந்தனிடம் தமிழன்றி யாது கேட்பேன். ஈண்டு எழுதுவதெல்லாம் எந்தையவன் அருளே...
வெண்பாவால் வேலவனை பாடும் ஆர்வம் மிகவுண்டு, விரைவில் இப்பக்கங்களில் வெண்பா வடிக்கவுள்ளேன்.. தொடர்ந்து வருகை தரவும்.
நன்றி.
தலைப்பைப் பார்த்து விட்டு ஏதோ கலைஞர் பற்றிய விஷயம் (மு.க. அழகே) என்று நினைத்து ஓப்பன் செய்தால் இனிய வியப்பு.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Post a Comment
<< Home