சாத்வீகன்

எனது வானத்திற்கு கீழே...

Sunday, November 12, 2006

புதுக்கவிதை புனைதல்

வலைத்தளம் எங்கும் புதுக்கவிதைகள்.
எளிமையும் புரிதலும் மட்டும் புதுக்கவிதைகளா..

புதுக்கவிதைக்கென இலக்கணம் உண்டா...

வார்த்தைகள்
ஒன்றின் கீழ்
ஒன்றுதான்
புதுக்கவிதையோ ?

3 Comments:

Blogger Udhayakumar said...

என்னை சொல்லதானே???

6:18 PM  
Blogger சாத்வீகன் said...

உதய் // என்னை சொல்லதானே???
யாரையும் சொல்ல அல்ல உதய்.

பொதுவான கருத்து விவாதிக்க விரும்புகிறேன்.

ஒரு திரைப்படத்தில் பார்த்திபன் சொல்வது போல..

ஒரு ஸ்வீட் ஸ்டாலே
ஸ்வீட்
சாப்பிடுகிறதே...

கவித.. கவித..

நானே புதுக்கவிதைன்னு சொல்லி ஒண்ணுங்கீழே ஒண்ணுதான் எழுதறேன்...
என்னை பொறுத்தவரைக்கும் கவிதை உணர்வை சொல்ல வேண்டும்..
அதற்காக வெறுமனே சொல்லிச் சென்றால் உரைநடை ஆகிவிடும்...

தினத்தந்தி குடும்பமலரின் 31ம் பக்க நான்கு அல்லது ஐந்து வரி உரைநடையை என்னால் கவிதை என்று ஏற்க முடிந்ததில்லை..

எடுத்துக்காட்டு..

அவள் போனாள்..
பின்னாலேயே போனது
மனம்..

இது மிக எளிமை..

மாற்றாக..

வழித்தடமெங்கும்
வாசம் வீசி சென்றாள்..
தேடிப் பின்திரியும்
மனம்.

அதற்காக முன்னதை கவிதையில்லை என்றும் பின்னதுதான் கவிதை என்றும் சொல்ல வரவில்லை..
உணர்வுகள் முன்னிறுத்தப்படும் போது மொழியும் முன்னிறுத்தப் பட வேண்டும் என்பதே என் வாதம்..

7:11 PM  
Blogger சாத்வீகன் said...

திவ்யா அவர்களின் கவிதையே தெரியுமா? பதிவிலும்,

ஆசிப் மீரான் அவர்களின் புதுக்கவிதையின் 'நவீன' முகங்கள் - பாகம் 2 பதிவிலும்

நான் இட்ட பின்னூட்டம் இங்கு..

.............................


ன்
று


இக்கவிதை மூலம் தெரிய வரும் செய்திகள்...

1. நன்று என்று சொல்லக்கூடியவர், அதுவும் எழுத்துக்களை ஒன்றின் கீழ் ஒன்றாக போடுபவர் நிச்சயம் கவிஞராக இருப்பார்...

2. இந்த கவிதையை அவர் இங்கு இட்டு இருப்பதால் அனேகமாக அவர் இந்த இடுகையை சிலாகித்திருக்கிறார்...

3. இந்த மூன்று எழுத்து கவிதை மூலம் அவர் இந்த இடுகையை மட்டும் அல்லாது இந்த பக்கங்கள் யாவையும் சிலாகித்திருப்பதாக தெரிகிறது..

4. நன்று என்ற கவிதையில் இருக்கும் கனத்தை கவனிக்கவும்... இதன் உட்பொருள் மிக நுட்பமானது... இதன் மூலம் கவிஞர் தங்கள் கருத்துக்களுடன் ஒத்துப்போவது புலப்படும்

5. இக்கவிதை முன், பின் நவீனத்துவங்களை தாண்டி கருத்தியல் தளத்தில் இயங்குவது தெற்றென விளங்கும்...

6. இக்கவிதையை இங்கு இணையத்தில் இட்டதன் மூலம் கவிஞர் கணிப்பொறி இயக்கும் திறம் பெற்றுள்ளது தெற்றென விளங்கும்...

7. இங்கு அவர் சாத்வீகன் என்ற பெயரில் பின்னூட்டியுள்ளமையால் இவருக்கு கட்டாயம் ஒரு வலைத்தளம் இருக்கக் கூடும். நிச்சயம் அங்கு கவிதை என்ற பெயரில் ஏதேனும் கிறுக்கப் பட்டிருக்கலாம்...


அட... அட ஒரு சிறு கவிதை இத்துணை விடயங்களை தன்னுள் இணைத்துள்ளது எனில் இந்த நவீன கவிதையின் ஆழமும் அதன் வீச்சும் எத்தனை தொலைவு இருக்க கூடும்...

4:29 PM  

Post a Comment

<< Home