சாத்வீகன்

எனது வானத்திற்கு கீழே...

Saturday, November 11, 2006

மரபு கவிதைகள் எங்கே......

வலைத்தளம் முழுதும் சுற்றி வந்தும் மரபு கவிதைகளை பார்க்க முடியவில்லை. தமிழில் மரபு கவிதைகள் அருகி வருகின்றன.
இன்றைய கவிஞர்கள் தங்களை நவீனம் சார்ந்து புதுக்கவிதைகளுடனேயே இணைத்துக் கொள்கிறார்கள்...

வணிக பத்திரிகைகளில் கவிதைக்கு இடமில்லை என்று பார்த்தால்
தீவிர தளத்தில் இயங்கும் இதழ்களில் புதுக்கவிதைகள் மட்டும்...

வெளியிடப்படும் கவிதை நூல்கள் யாவும் நவீனம் சார்ந்து, பாரதியை தாண்டி மரபு தமிழில் இருப்பதாகவே தெரியவில்லை...

மரபு மரபழிந்து போக யார் காரணம்..
பொது விருப்பத்தில் மரபிற்கு இடமில்லை என்று கருதி மரபை புறம் தள்ளிய கவிஞர்களா..
மரபிலிருந்து மாறுபட்டவர்களாய் தோற்றமளிக்கும் வாசகர் வட்டமா...


நவீனமோ, மரபோ கவிதைகளை அவற்றின் கனத்திற்காக, அழகியலுக்காக ஏற்றுக் கொள்ளும் வட்டம் என்றும் உண்டு...

கவிதை தொழில் என்று கொள்ளும் கவிஞர்காள்...
மரபிலும் சற்று கவி படைப்பீர்......

2 Comments:

Blogger ஷைலஜா said...

கோவலூரில் குறுகிடை கழியில்
மூவர் பாடிய முத்தமிழ் மாலையாய்
மாறில் உறுதி மழிசை முனிவர்
கூறிய சந்தம் குலவு தாரினாய்
தொண்ட ரடிப்பொடி சுவையுறத் தொடுத்தபூ
விண்ட தொங்கல் விளங்கும் மார்பினாய்
பாணர் பாடிய பசுந்தமிழ்த் தொடையல்
மாணுறச் சூடிய மாட்சிமை யுடையாய்
சேர மன்னன் திருமொழி என்னும்
ஆர மணிந்த அழகிய மார்பா
செந்தமிழ் மன்னன் சீரிய கலியன்
தந்த தொடையல் தகவுறச் சூடினாய்
வில்லிபுத்தூர் விட்டுணு சித்தர்
சொல்லெழில் கண்ணி சூடிமகிழ்ந்தாய்
சூடிக் கொடுத்தாள் சுகந்த மாலையும்
பாடல் மாலையும் பரிவுடன் ஏற்றாய்
மதுரகவியின் மங்கல மாலையும்
எதிரிலாமகிழ மாலையும் ஏற்ற
குருகை முனிவன்குளிர்ந்த தமிழ்த்தேன்
பெருகு மாலைகள் பேணி அணிந்தாய்
அந்தரத் தமிழில் மகிழும் அரங்கா
சுந்தரத் தோளா! தொழுதனம் உனையே!

சாத்வீகன்! மரபுக்கவிதை இதோ அளித்துவிட்டேன்!
ஷைலஜா

நிலைமண்டில ஆசிரியப்பா.

9:32 PM  
Blogger பொன்ஸ்~~Poorna said...

http://payananggal.blogspot.com/

10:11 PM  

Post a Comment

<< Home