சாத்வீகன்

எனது வானத்திற்கு கீழே...

Tuesday, November 14, 2006

தமிழ் நாட்டில் தமிழறியா குழந்தைகள்


"கடைக்குப் போனியே, மிச்சம் எவ்வளவு, இருபது ரூபாயா?"

"இருபதுன்னா எவ்வளவு மாமா ? Thirty தானே..."

"இருபதுன்னா Twenty."

"அதெல்லாம் எனக்கு தெரியாது. Fifty Rupees கொடுத்தேன். Biscuit Twenty. மிச்சம் Thirty."

பத்து வயது சிறுவன். பெற்றோர் தமிழர். தமிழ் நாட்டிலேயே பிறந்து வளர்ந்தவன். நகரின் சிறந்த மெட்ரிகுலேசன் பள்ளி...
தமிழில் எண்ணத் தெரியவில்லை...

History, Geography என்று சொல்லாமல் வரலாறு, புவியியல் என்று சொல்லும் நான் அச்சிறுவனின் கண்ணில் வித்தியாசமாகத் தான் தெரிகிறேன்.

வரலாறு என்றால் அஜித் படமாக மட்டும் அறிந்திருக்கும் குழந்தைகள்.

நமது பள்ளிகள் வெறுமனே ஆங்கிலத்தில் பேசி பொதி சுமக்கும் சமுதாயத்தையா உருவாக்கி வருகின்றன?

7 Comments:

Blogger Machi said...

தமிழக அரசின் தமிழ் கட்டாயம் என்ற சட்டத்தினால் இந்த நிலை மாறும் என்று எண்ணுவோம்.

3:55 PM  
Blogger துளசி கோபால் said...

தமிழ் படிச்சால் நிறைய மார்க்ஸ் வர்றதில்லையாம். ஃப்ரெஞ்சு படிச்சால்
நிறைய மார்க் கிடைக்குமாம். மார்க் கூட்டுத்தொகை (!!)ரொம்ப முக்கியமுன்னு
இப்ப புள்ளைங்க தமிழ் படிக்கிறதில்லையாம். எல்லாம் அப்பா அம்மாங்க
சொல்ல்க் கேட்டதுதான் (-:

4:51 PM  
Blogger siva gnanamji(#18100882083107547329) said...

அரசின் கொள்கை
இந்நிலை மாற்றும்.

5:12 PM  
Blogger தீரன் said...

இதை நானும் ஆராய விழைந்ததுண்டு. ஆனால் என்னால் கூட ஆங்கிலம் கலக்காத தமிழில் பேச முடிவதில்லை. ஏன் யோசிக்க கூட முடிவதில்லை. நாளைய வருங்காலத்தை நினைத்தால் கவலையாகத்தான் உள்ளது கண்டிப்பாக ஏதாவது செய்தாகவேண்டும்.

7:12 PM  
Blogger சாத்வீகன் said...

குறும்பன், துளசி கோபால், சிவஞானம்ஜி, தீரன், ஒண்டிபுலி
கருத்துக்களுக்கு நன்றி...

தமிழ்நாட்டில் வேறு தாய்மொழி உள்ளவர்கள் தமது மொழியை முதல் மொழியாக படிக்க வாய்ப்பு உள்ளது. இந்தி, உருது, தெலுங்கு, மலையாளம், பிரெஞ்சு மற்றும் சமஸ்கிருதமென...

ஆனால் தமிழ்ப்பெற்றோர் மதிப்பெண்களின் எளிமைக்காக இவற்றை தமது குழந்தைகள் மீது திணிப்பதுதான் வருத்தமான விஷயம்.

தமிழில் எண்ணத்தெரியாதது அந்த சிறுவனின் குற்றமல்ல. பெற்றோரின் குற்றம். அவனிடம் தமிழ் எண்களை பேசாது ஆங்கிலம் மட்டுமே பேசியவர்கள் அவர்களே...

ஒவ்வொரு குழந்தையும் தாயிடம் கற்ற மொழியையே பேசும்.. இருபது, முப்பது என குழந்தையிடம் பேசாமல் ட்வென்டி, தர்ட்டி என பேசிவந்தவர்கள் அவர்களே...


மூன்று முதல் பத்து வயது வரை குழந்தைகளின் மொழியறியும் திறன் அதிகம்.

எனவே ஆங்கிலத்தை மட்டுமே சொல்லி தராது தமிழையும் சேர்த்தே சொல்லி வளர்க்கலாம்.

ஆங்கிலம் வேண்டாம் என்று சொல்லவில்லை. தமிழை தவிர்க்காதீர்கள் என்பதே நம் எதிர்பார்ப்பு.

http://valaignan.blogspot.com/ லிருந்து எனது கவிதை இங்கு...

கான்வென்டில் சேர்த்துவிட்டு
கனவு காணும் பெற்றோர்..

இரண்டாம் வகுப்புக்கு
இருபதாயிரம் வாங்கும் பள்ளிகள்..

கொதிக்கும் வெயிலில்
ஷூ அணிந்து
டை இறுக்கி
ஆட்டோக்களில் அடுக்கப் படும்
இளந்தளிர்கள்...

வருடம் முழுதும்
பொதியேறிய முதுகுகளுக்கு
இன்றாவது ஓய்வு...

காந்தியாய், நேருவாய்
வேடமணிந்து
விழிக்கும் சிறுவர்கள்...

திணித்தல் தொடருமட்டும்
குழந்தைகள் தினத்தில்
அர்த்தம் இல்லை...


நன்றி சாத்வீகன்

10:18 PM  
Blogger வெற்றி said...

சாத்வீகன்,
வருத்தப்பட வேண்டிய செய்தி. நாம் பொருளாதார ரீதியாக [தொழில் வாய்ப்புக்கள்] முன்னேறுவதற்கு மாற்று மொழிகளைக் கற்பதில் தவறில்லை. கட்டாயம் படிக்க வேண்டும். அதற்காக தமிழர்களூடன் உரையாடும் போது தமிழில் கதைக்காது[பேசாது] ஆங்கிலத்தில் பேசுவது வெட்கப்பட வேண்டிய விடயம். சில மாதங்களுக்கு முன் எனது நண்பரின் இல்லத்தில் கலைஞர் குடும்பத்தினரது SUN TV நிகழ்ச்சி ஒன்றைப் பார்த்த போது , உண்மையில் கோபம் தான் வந்தது. நிகழ்ச்சியில் பங்கேற்ற பலர் தமிங்கிலிஷில் பேசினார்கள். பெரியவர்களே, வழி காட்ட வேண்டியவர்களே இப்படி என்றால் வளரும் குழந்தைகளை எப்படிப் போவார்கள் என்று சிந்தித்துப் பார்க்கும் போது மிகவும் வேதனையாக இருக்கிறது.

6:52 PM  
Blogger அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

இந்த முறை ஊருக்குப் போன போது இதே போன்ற அதிர்ச்சி அனுபவங்கள் கிடைத்தன. ஆங்கிலம் தெரியாமல் அன்னியமாகி இருக்கும் போன தலைமுறை. ஆங்கிலத்தையும் தமிழையும் பிரித்துப் பேசத் தெரியாத இந்தத் தலைமுறை. தமிழே தெரியாத அடுத்த தலைமுறை ஒன்று முளைத்துக் கொண்டிருக்கிறது. ஹ்ம்ம்..

6:37 AM  

Post a Comment

<< Home