சாத்வீகன்

எனது வானத்திற்கு கீழே...

Sunday, December 10, 2006

கொழுகட்டை கதை...

சின்னதா ஒரு கதை சொல்லலாம்னு.. எப்பவோ கேட்ட கதை..

புதுசா கல்யாணம் ஆன மாப்பிள்ளை...

வேல விஷயமா வெளியூரு போயிக்னாரு..

பக்கத்துலய மாமியாரு வூடு...

போலன்னா நல்லா இருக்குமா.. பொஞ்சாதி வேற.. எங்க ஊரு பக்கமாத்தான் வேலயா போறீங்க.. எங்க அம்மாவ பாத்து அப்பிடியே இந்த பலகாரத்தையும் குடுத்து வுடுங்கன்னு சொல்லி குடுத்து வுட்டு இருக்கிறாங்கோ...

சரின்னு நம்ப புது மாப்பிள்ளையும் வேலை முடிஞ்சதும் சோக்கா மாமியாரு வூட்டுக்கு கிளம்பிட்டாரு..

முததடவயா பொஞ்சாதி இல்லாம மாமியாரு வூட்டுக்கு போறாரு..

மாப்பிள்ளய பாத்த அவிங்களுக்கு கையும் ஓடல.. காலும் ஓடல...

கடுதாசி கூட போடாம இல்ல வந்து நிக்கறாரு..

அதுவும் நாளும் கிழமையுமா பாத்து வந்து இருக்கறாரு.. கோழியடிச்சு கூட குழம்பு வெக்க முடியாத நாளுல...

சரி.. நல்ல பலகாரமா ஏதாவது செய்யலாம்னு மாமியாரு கொழுகட்ட செஞ்சாங்க....

மாப்பிள்ளை இதுக்கு முன்னாடி கொழுகட்டைய சாப்பிட்டதே இல்ல..
ரொம்ப புடிச்சி போயி எல்லாத்தையும் தீத்து பூட்டாரு..

"அத்த, ரொம்ப நல்லா இருக்கே, இந்த பலகாரம் பேரு என்ன" ன்னு கேட்டாரு.. அத்தையும் வெட்கத்தோட "இது பேரு கொழுகட்டை மருகமனே"ன்னு சொன்னாங்க..

இதே மாதிரி பலகாரம் செய்ய என் பொண்ணுக்கும் தெரியும்னு மாமியார் சொன்னதும் மருமகனுக்கு சந்தோஷமாயிடுச்சி...

பலகாரம் பேர ஞியாபகம் வெச்சிக்கிட்டு வீட்ல போய் செய்ய சொல்ல வேண்டியதுதான்னு கிளம்பிட்டாரு...

பலகாரம் பேரு மறக்காம இருக்க, "கொழுகட்டை, கொழுகட்டை"ன்னு சொல்லிக்கிட்டே போறாரு மாப்பிள்ளை...

நடுவில இரண்டு மூணு சின்ன பிள்ளைங்க விளையாடிட்டு இருந்திச்சி..
அதுல ஒருத்தன் விளையாட சொல்ல "அத்திரிபாஞ்சா" அப்பிடின்னு சொன்னானா.

அத கேட்ட மாப்பிள்ளை கொழுகட்டைய மறந்துட்டாரு..
அத்திரிபாஞ்சாவை புடிச்சிகிட்டு "அத்திரிபாஞ்சா, அத்திரிபாஞ்சா"ன்னு சொல்லிக்னே வீடு போய் சேந்தாரு...

வீட்டுக்கு போயி பொஞ்சாதிய பாத்து எனக்கு அத்திரிபாஞ்சா செஞ்சி குடுன்னு கேட்டாரு..

"அது இன்னாயா இது. புது பலகாரமா இருக்குதே" அப்படின்னு பொஞ்சாதி சொல்ல..

வந்துச்சு பாருங்க மாப்பிள்ளைக்கு கோபம்.

"இப்பதான் நான் உங்க ஆத்தா வூட்ல அத்திரிபாஞ்சாவை சாப்டுட்டு வர்றேன்.. அவிங்க உனக்கு செய்ய தெரியும்னு சொன்னாங்க.. கழுத தெரியாதுன்னா சொல்ற"ன்னு பாஞ்சாரு..

அப்படி ஒரு பலகாரம் எனக்கு தெரியாதுன்னு பொஞ்சாதி சொல்ல கோபம் வந்து பொஞ்சாதிய போட்டு அடிக்க ஆரம்பிச்சிட்டாரு மாப்பிள்ளை..

அவளும் அடிக்கு தப்பிக்க அங்க ஓடி இங்க ஓடி அடுப்பங்கரையில புகுந்துட்டா.. அங்க இருந்த வெறகு கட்டைய எடுத்து புருஷன் தலையில ஒரே போடு... அவன் கத்த.. இவ கத்த.. ஒரே ரணகளமா போச்சி..

பக்கத்து வீட்டுக்காரங்க எல்லாம் வந்துட்டாங்க...

அவிங்க எல்லாம் சேந்து இது இன்னா கூத்துன்னு கேக்க.. புருஷன்காரன் அத்திரிபாஞ்சா செஞ்சு தராத கதைய அவிங்க கிட்ட சொன்னான்.

அவங்களும், "இது என்ன அத்திரிபாஞ்சா கேள்வி படாத பலகாரமா இருக்குதே... அதுக்காக பொஞ்சாதிய போட்டு இப்படியா அடிப்பாங்க , கொழுகட்டை மாதிரி வீங்கி போய் இருக்குதே"ன்னு சொல்ல..


அவன் குதிக்க ஆரம்பிச்சிட்டான்.. "அதேதான்... அதேதான்.. அந்த பலகாரம் பேரு கொழுகட்டை" அப்பிடின்னான்..

எல்லாரும் தலயில அடிச்சுக்னு திரும்பி போனாங்க.

12 Comments:

Blogger Kannabiran, Ravi Shankar (KRS) said...

ஹா ஹா ஹா....
சாத்வீகன் இப்படிக் கவுத்திட்டீங்களே!
சாப்பிடக் கொழுக்கட்டை கேட்டா, இப்பிடித் தலையில
வீங்கன கொழுக்கட்டைக்கு ஐடியா கொடுக்கறீங்களே! :-))

அப்பனே புள்ளையாரப்பா....!:-))

10:08 PM  
Blogger முத்துலெட்சுமி/muthuletchumi said...

இந்த கதை நானும் சின்னதுல கேட்டு இருக்கேன் .இப்போ என் குழந்தைகளுக்கு சொல்வது உண்டு.
இது போல "எள்ளுருண்டை மாப்பிள்ளை" கதை இருக்கே கேட்டதுண்டா? அதுவும் நல்லா இருக்கும்.
எப்படியோ பாடா படுத்தும் மாப்பிள்ளையை கிண்டல் பண்ண இப்படி கதை பண்ணி இருக்காங்க பாருங்க.

10:20 PM  
Blogger Hariharan # 03985177737685368452 said...

இது பரமார்த்த குருவும் சீடர்களும் கதையைத் தழுவிய மாதிரியாகவல்லவா இருக்கிறது!

மனைவியை அடிப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்!

சமைக்கத் தெரியாத மனைவி கணவனின் திறமையின் தூண்டுகோல்!

இம்மாதிரி இல்லங்கள் நளன்களின் உற்பத்திக்கூடம் அல்லவா?
:-)))

10:46 PM  
Blogger குமரன் (Kumaran) said...

இந்தக் கதையை நானும் சின்ன வயதில் படித்திருக்கிறேன் சாத்வீகன். :-))

4:01 AM  
Blogger சாத்வீகன் said...

வாங்க கே.ஆர்.எஸ்.

மாப்பிள்ளை கொழுகட்டைக்கு வீங்குனாருன்னு சொல்லுவோமே அது இதுதான்... :)))

9:49 AM  
Blogger சாத்வீகன் said...

வாருங்கள் லட்சுமி

இந்த தொலைக்காட்சி யுகத்திலும் குழந்தைகளுக்கு கொழுகட்டை கதை சொல்கிறீர்கள் என்றால் கொடுத்த வைத்த குழந்தைகள்.. எல்லா குழந்தைகளுக்கும் இப்படிபட்ட கதைகள் கேட்க கிடைப்பதில்லை...

எள்ளுருண்டை கதை ? மாப்பிள்ளை எள்ளுருண்டைக்கு ஆசைப்பட்டு உரலில் தலையை விட்டு மாட்டிக்கொண்ட கதைதானே.. சரியா ?

வருகைக்கு நன்றி.

9:53 AM  
Blogger சாத்வீகன் said...

வாருங்கள் ஹரிஹரன்..

இது கிராமங்களில் வழங்கும் கிராமிய கதைகளுள் ஒன்று.. எந்த பரமார்த்த குரு கதையுடன் ஒத்து போகிறது என எனக்கு தெரியவில்லை.

/****மனைவியை அடிப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்! ****/

கதையை படியுங்கள் பதிலுக்கு மனைவியும் கணவனை விறகு கட்டையால் அடிக்கிறார். சமத்துவம் நிறைந்த வீடு. :)))

/*****சமைக்கத் தெரியாத மனைவி கணவனின் திறமையின் தூண்டுகோல்!

இம்மாதிரி இல்லங்கள் நளன்களின் உற்பத்திக்கூடம் அல்லவா?*****/


உண்மை. உண்மை. சொந்த அனுபவம் இல்லையென்று நினைக்கிறேன். :))

வருகைக்கு நன்றி.

9:59 AM  
Blogger சாத்வீகன் said...

வாருங்கள் குமரன்..

நானும் இக்கதையை படித்தும் இருக்கிறேன், கேட்டும் இருக்கிறேன். கேள்வி வடிவில் கதை முழுமையாக இருந்ததால், இங்கு கேட்டதை அடிப்படையாக வைத்தே எழுதியிருக்கிறேன்.

வருகைக்கு நன்றி.

10:05 AM  
Blogger முத்துலெட்சுமி/muthuletchumi said...

//எள்ளுருண்டை கதை ? மாப்பிள்ளை எள்ளுருண்டைக்கு ஆசைப்பட்டு உரலில் தலையை விட்டு மாட்டிக்கொண்ட கதைதானே.. சரியா ?//
ஆமாம்..அதே கதை தான்..படுக்க போகும் முன் இரண்டு கதைகள் ஒன்று இது போன்ற கதை இன்னொன்று கடவுள் பற்றிய கதை சொன்னால் தான் தூங்க போவாள் என் பெண்.

9:13 PM  
Blogger G.Ragavan said...

எங்க அம்மாப்பாட்டி (அதாவது அம்மாவின் அம்மா) நிறைய கதை சொல்வார்கள். அப்படிக் கேட்ட கதைகளில் இதுவும் ஒன்று. ஒரே வித்தியாசம் அத்திரிபாஞ்சாவுக்குப் பதிலா அத்திரிபான்ஸ்கோல். அப்படீன்னா என்னன்னு கேட்டேன். பாட்டிக்கும் தெரியலை. எனக்கும் தெரியாது.

1:58 AM  
Blogger Hariharan # 03985177737685368452 said...

/*****சமைக்கத் தெரியாத மனைவி கணவனின் திறமையின் தூண்டுகோல்!

இம்மாதிரி இல்லங்கள் நளன்களின் உற்பத்திக்கூடம் அல்லவா?*****/

உண்மை. உண்மை. சொந்த அனுபவம் இல்லையென்று நினைக்கிறேன். :))//

சாத்வீகன்,

அப்படி எப்படிச் சொந்த அனுபவமில்லாமல் போகும். பகுதிக்கு உண்மையே!

நான் கொஞ்சம் உதார் விடும் நளன். ஆனால் நிரந்தர சோதனைச் சாலை எலி!

நல்ல சாப்பாட்டு(க்கு) ரசிகன் :-)))

5:37 AM  
Blogger  வல்லிசிம்ஹன் said...

சாத்வீகன்,
தலை தீபாவளிக்கு வரும் மாப்பிள்ளைகளுக்கு
எத்தனை சோதனை என்று

பழைய கதைகளைக் கேட்டால் தெரியும்.:-))

8:34 AM  

Post a Comment

<< Home