சாத்வீகன்

எனது வானத்திற்கு கீழே...

Tuesday, December 05, 2006

பள்ளிகளில் இந்தி தேவையான ஒன்றா..

இந்தி படிப்பது குறித்த இரு பதிவுகளை படிக்க நேரிட்டதின் எதிரொலியாய் இப்பதிவு..

1. तमिल - தேசிகன்
2. ஹிந்தி ஒயிக.. எக்சாம் ஹால் அக்குறும்பு.. அரைபிளேடு


அவர்கள் பதிவில் நான் இட்ட பின்னூட்டமே இங்கு..

-----------------------------------------------------------------------
தங்கள் பதிவில் பின்னூட்டிய பலரும், தாங்கள் உட்பட இந்தி படிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினர். நானும் உடன்படுகிறேன்.

ஆனால் அம்மா ஆடு படிக்க வேண்டிய காலத்திலேயே இந்தி படிக்க துவங்க வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை..

குழந்தைகளிடம் தமிழே முழுதாய் துவங்காத நிலையில் இந்தியை துவங்குவதால் குழந்தைகள் தமிழிலும் இந்தியிலும் அரை குறைகளாக போய் விடும் ஆபத்து இருக்கிறது.


தமிழகத்தில் இன்றும் துவக்க கல்வியும் நடுநிலை கல்வியும் எட்டாத நிலையில் இருக்கும் நிலையில் அரசுப்பள்ளிகளில் அரசே இந்தியை திணிக்க வேண்டும் என்பது நினைத்தும் பார்க்க முடியாத ஒன்று..

இந்தி மட்டுமல்ல எந்த மொழியையும் கற்க வயது ஒரு தடையில்லை..

நான் தமிழ் மீடியம். ஆங்கிலம் மூன்றாவது வகுப்பில்தான் துவங்கினேன்.
இந்தியை எட்டாம் வகுப்பில் பள்ளிக்கு வெளியில் துவங்கினேன். பிராத்மிக் முதல் பிரவீன் வரை நான்கு ஆண்டுகள் படிப்பு. இந்தியில் கவிதைகள் புரியுமளவுக்கு..

ஓரளவுக்கு இந்தியையும் தமிழையும் வேறுபடுத்தி பார்க்கும் வயதில் இந்தி படித்ததால் எனது தமிழ் எந்த விதத்திலும் தேயவில்லை.

பிஞ்சுகளிடையே தமிழுக்கு பதில் இந்தி என்பது எனக்கு எவ்விதத்திலும் ஒத்துக் கொள்ளக் கூடியது இல்லை.

நன்றி

सात्वीगन‌ / சாத்வீகன்



------------------------------------------------------------------------------------------------------------

13 Comments:

Blogger வஜ்ரா said...

सात्वीगन्,
தமிழுக்குப் பதிலாக ஹிந்தியைப் படிக்கவேண்டியதில்லை. ஹிந்தியையே படிக்கக் கூடாது என்று தடுக்க யாருக்கும் உரிமையில்லை, எந்த அரசுக்கும் உரிமையில்லை என்பதே என் கருத்து.

பள்ளியில் இந்தியை விருப்பப் பாடமாக வைக்கலாம். தமிழும் ஆங்கிலமும் கட்டாய பாடம். french, sanskrit பதிலாக ஹிந்தியை வைக்கலாம்.

Why give an option over tamil ? Give option over other languages.

தமிழ் மீடியத்தில் படிப்பவர்கள் ஹிந்தி வாடையே தெரியாமல் வளர்ந்து கடைசியில் திக்கித் திணறி ஆங்கிலத்தில் தஞ்சம் புகுவது நன்றாகவா இருக்கிறது. ?

2:30 AM  
Blogger சாத்வீகன் said...

டுபாக்கூர் அவர்களே

இந்தி என்பது தனிப்பட்ட பிரிவு மக்கள் படிக்க மட்டுமே என்பது நன்று அன்று. மொழி ஒரு தொடர்பு சாதனம் என்ற அளவில் தேவையுள்ள யாவரும் படிக்க வேண்டிய ஒன்றே. நமது தாய் மொழியார்வம் பிறமொழிகைள வெறுக்கவோ, இது இன்னார் கற்பதற்கான என வகைபிரிக்கவோ வகை செய்தல் கூடாது. காழ்ப்புணர்ச்சியை கைவிடுவீர்.

வருகைக்கு நன்றி.

2:34 AM  
Blogger Unknown said...

Thevai ilaathathu.....

2:41 AM  
Blogger ஜோ/Joe said...

//தமிழ் மீடியத்தில் படிப்பவர்கள் ஹிந்தி வாடையே தெரியாமல் வளர்ந்து கடைசியில் திக்கித் திணறி ஆங்கிலத்தில் தஞ்சம் புகுவது நன்றாகவா இருக்கிறது. ?//

நன்றாகத் தான் இருக்கிறேன் .பிளஸ் டூ வரை தமிழ் மீடியத்தில் படித்து நான் என்ன நாசமாகவா போய்விட்டேன்.

2:43 AM  
Blogger சாத்வீகன் said...

வஜ்ரா அவர்களே

தங்களுடன் உடன்படுகிறேன்.

தமிழகத்தில் தமிழே முதல் மொழியாய் இருத்தல் வேண்டும். பள்ளிகளில் தமிழ் கட்டாய பாடமாய் இருத்தல் வேண்டும். தமிழறியாத தமிழ் தலைமுறையொன்று வருவது தடுத்து நிறுத்தப்படல் வேண்டும்.

தமிழ் தமது தாய்மொழியன்று என்று கோருவோருக்கு மட்டும் பிறமொழியை முதல் மொழியாய் எடுத்துப் பயில வாய்ப்பு தரல் வேண்டும்,

ஆயின் இந்தியை திணிப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை.

அதே நேரத்தில் இந்தியை விருப்பப் பாடமாக மூன்றாவது மொழியாக எடுத்துப் பயில்வோர்க்கான வாய்ப்புகளும் இருக்க வேண்டும். அது மறுக்கப்படக் கூடாது. தொடர்புக்கான மொழி என்ற அளவில் இந்தி பயிலுதல் அங்கீகரிக்கப்பட வேண்டும்.

பிற மொழி ஆர்வத்தில் தாய்மொழி மறுக்கப்படுவது நன்று அன்று.

நன்றிகள்
சாத்வீகன்

2:46 AM  
Blogger ROSAVASANTH said...

//தமிழுக்குப் பதிலாக ஹிந்தியைப் படிக்கவேண்டியதில்லை. ஹிந்தியையே படிக்கக் கூடாது என்று தடுக்க யாருக்கும் உரிமையில்லை, எந்த அரசுக்கும் உரிமையில்லை என்பதே என் கருத்து.

பள்ளியில் இந்தியை விருப்பப் பாடமாக வைக்கலாம். தமிழும் ஆங்கிலமும் கட்டாய பாடம். french, sanskrit பதிலாக ஹிந்தியை வைக்கலாம்.//

ஹிந்தி படிப்பதை (கட்டாயமாக படித்துத்தான் ஆகவேண்டும் என்பதை அல்ல) எப்போது தடுத்தார்கள்? யார் தடுத்தார்கள். ஹிந்தி விருப்பப் பாடமாக தேர்ந்தெடுக்க இயலாமல் எப்போது இருந்திருக்கிறது? உளருவதற்கு ஒரு வரைமுறை இல்லையா?

3:13 AM  
Blogger வஜ்ரா said...

//
உளருவதற்கு ஒரு வரைமுறை இல்லையா?
//

உளருவதன் வரைமுறையை இந்த செய்தி வெளியிட்ட மவுண்ட் ரோடு மஹாவிஷ்ணுவுக்குச் சொல்லிக் கொடுக்கவும்.

Why deny the oppurtunity to poor people who go only to government schools ?

3:38 AM  
Blogger சன்னாசி said...

//தமிழ் மீடியத்தில் படிப்பவர்கள் ஹிந்தி வாடையே தெரியாமல் வளர்ந்து கடைசியில் திக்கித் திணறி ஆங்கிலத்தில் தஞ்சம் புகுவது நன்றாகவா இருக்கிறது. ?//

நன்றாகத்தான் இருக்கிறது. ஆறாம் வகுப்பு வரை நானும் தமிழ்மீடியம் தான். ஏபிசிடி உங்கொப்பன் தாடி என்ற அளவுக்குத்தான் ஆங்கிலம் தெரியும். ஜோ கேட்டதுபோல, நான் நாசமாகவா போய்விட்டேன்? ப்ளஸ் டூ வரை தமிழில் படித்து வந்த மாணவர்கள் பலர் கல்லூரியில் என்னைவிட அதிக மதிப்பெண்கள் பெற்றும் இருந்தார்கள் - அவர்களெல்லாம் எங்கே தட்டுத் தடுமாறினார்கள்? அட, கல்லூரிப் படிப்பு, PhD வரை சீன மொழியில் படித்துவிட்டு வருபவர்கள் ஆங்கிலத்தில் பேசுகையில் சீன accentடுடன் பேசினாலும் வேலை என்று வரும்போது போடு போடு என்று போடுவதில்லை? விஷயஞானத்தில் எந்தவிதத்தில் அவர்கள் குறைந்துபோனார்கள்?

10:56 AM  
Blogger வஜ்ரா said...

சன்னாசி,
இங்கே ஆங்கிலம் தேவையா என்பதல்ல பிரச்சனை.

இந்தியை திணிப்பதாக எண்ணிக்கொண்டு அதை ஒழித்துக்கட்டுவதால் தான் தமிழ் இன்று உயிரோடு இருக்கிறது என்று ஒரு சிலர் நம்புகின்றனர்.

அது தவறு.

இந்தியை விருப்பப் பாடமாக அரசுப் பள்ளியில் ஏன் இன்னும் அறிமுகப் படுத்தமாட்டேன் என்கிறார்கள் ?

இந்தி தெரிந்துகொள்வதனால் தமிழுக்கு என்ன கேடு வந்துவிடப் போகிறது.

இந்தி தெரிந்திருந்தால் இந்தியர்களான நாம் ஒருவருக்கொருவர் ஆங்கில மொழியில் பேசிக் கொள்ளாமல் இந்தியில் பேசிக்கொள்ளலாம்.

(அவர்கள் ஏன் தமிழ் கத்துக் கொள்ளக் கூடாது என்று தர்க்கம் செய்யலாம், அது உங்களது தார்மீக உரிமை. தமிழைச் செம்மொழி என்று அறிவிப்பதில் காட்டும் வீரியம் தில்லியில் தமிழ் சங்கத்தில் தமிழ் பாடதிட்டத்தை வகுப்பதிலும் தமிழைப் பரப்புவதிலும் காட்டியிருந்தால் தேவலை)

மேலும், பல மத்திய மாநில அரசு சம்பந்தப் பட்ட கடிதப் போக்குவரத்தும், communication களும் இந்தியில் நடத்திக் கொண்டு குழப்பத்தைக் குறைக்கலாம்.

இந்தி தெரியாக கிளர்க்குகளால் CSIR, UGC ஆராய்ச்சி மாணவர்களுக்கு fellowship வழங்குவதில் குளருபடிகள் தமிழகப் பல்கலைகழகங்களில் அதிகம். (இது நேரில் கண்ட உண்மை).

ஆங்கிலம் பேசுவதினால் ஒன்றும் நாசமாகப் போனதாக நான் சொல்லவில்லை. பேசுங்கள், ஆங்கிலத்திலேயே பேசிக்கொள்ளுங்கள். யார் வேண்டாம் என்றது. இப்பவெல்லாம் பீட்டர் வுடுபவர்களுக்குத் தான் சென்னையில் ஃபிகர்கள் மசிகின்றன.! :D

உங்களுக்கு இந்தி மொழி மேல் வெறுப்பு என்பதற்காக தமிழகத்தில் வாழும் அனைவரும் அதே போல் சிந்திக்க வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பது மூடத்தனம்.

இந்தியை அரசு பள்ளியில் அனுமதிக்கவேண்டும். விருப்பப் பாடமாக, மூன்றாவது மொழியாக ! இதுவே எனது கருத்து. இதில் மாற்றம் இல்லை. A strong three language policy is needed.

விரும்பியவர்கள் படிக்கட்டுமே, அதைத் தடுக்க யாருக்கும் உரிமையில்லை.

11:56 AM  
Blogger சாத்வீகன் said...

வஜ்ரா அவர்களே,

தங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

இந்தியை விரும்பினால் படிக்கக் கூடிய அளவில் இருக்க வேண்டும் என்பதில் நான் தங்களுடன் உடன்படுகிறேன்.

ஆனால் ஆங்கிலத்துக்கு மாற்றாக மத்தியில் தொடர்பு கொள்ள இந்தி வரவேண்டும் என்ற தங்கள் வாதம் எனக்கு ஏற்புடையதாக இல்லை.

தமிழகம் தாண்டி மும்மொழி கட்டாயமாக்கப்பட்டுள்ள மாநிலங்களில், மக்கள் தங்கள் தாய்மொழி இலக்கிய செறிவை எந்த அளவு தெரிந்துள்ளார்கள் என்பதை ஒப்பிடும்போது, நமது இருமொழி மட்டுமே கட்டாயம் என்பது எந்த அளவு மொழிக்கு ஆக்கம் தந்துள்ளது என்பதை அறியலாம்.

தமிழ்மணம் இருப்பது போல், தெலுங்கு மணமோ, இந்தி மணமோ இருக்கிறதா என்று தெரியவில்லை. இன்று தமிழ் மணத்தில் இத்துணை பேர் தமிழ் பதிகிறோம் என்பதே நமது மொழிக் கொள்கை நமது மொழியை காத்து வருவதற்கு சான்று.

தமிழை நன்கு கற்று அறிந்த பின்பே பிற மொழி கற்க விழைய வேண்டும் என்பதே என் கருத்து. பள்ளிகளில் எட்டாம் வகுப்புக்கு மேல் கட்டாயப்பாடம் என்றல்லாது விருப்பப் பாடம் என்ற அளவிலேயே இந்தியை கொண்டு வரலாம்.

நன்றிகளுடன்
சாத்வீகன்

1:02 PM  
Blogger G.Ragavan said...

உங்கள் கருத்தோடு ஒத்துப் போகிறேன் சாத்வீகன்.

// Vajra said...
सात्वीगन्,
தமிழுக்குப் பதிலாக ஹிந்தியைப் படிக்கவேண்டியதில்லை. ஹிந்தியையே படிக்கக் கூடாது என்று தடுக்க யாருக்கும் உரிமையில்லை, எந்த அரசுக்கும் உரிமையில்லை என்பதே என் கருத்து. //

இப்பொழுது அரசு தடுக்கிறதா என்ன? கன்னடம், மராட்டி, தெலுங்கு, மலையாளம், உருது படிக்கவும் அரசாங்கம் தடுக்கிறது என்றால் இந்தி படிக்கவும் அரசாங்கம் தடுக்கிறது எனலாம்.

// பள்ளியில் இந்தியை விருப்பப் பாடமாக வைக்கலாம். தமிழும் ஆங்கிலமும் கட்டாய பாடம். french, sanskrit பதிலாக ஹிந்தியை வைக்கலாம். //

ஃப்ரெஞ்சும் வடமொழியும் சொல்லித் தரும் பள்ளிகளில் இந்தியும் இருக்கிறது என்பதே உண்மை.

// Why give an option over tamil ? Give option over other languages.

தமிழ் மீடியத்தில் படிப்பவர்கள் ஹிந்தி வாடையே தெரியாமல் வளர்ந்து கடைசியில் திக்கித் திணறி ஆங்கிலத்தில் தஞ்சம் புகுவது நன்றாகவா இருக்கிறது. ? //

பிதற்றல். இந்தி வாடை அடிக்காமல் சோறு இறங்காமல் யாரும் கிடக்கவில்லை.

இந்தி படிப்பது தவறென்று சொல்லவில்லை. இந்தி தெரிந்து கொள்ள விரும்பினால் அதற்கு எத்தனையோ வழிமுறைகள் உள்ளன. வஜ்ரா இந்தியை எங்கே படித்தீர்கள்? அரசாங்கம் தடுத்ததால் நீங்கள் படிக்காமல் போய் விட்டீர்களா? அவனவன் வெளிநாட்டு மொழிகளையே மூன்று நான்கு மாத கிராஷ் கோர்சில் படிக்கிறான். அப்படியிருக்க ஒரு ஊரில் வேலைக்குப் போனல் மட்டுமே உதவக் கூடிய ஒரு மொழியை சிறு வயதிலிருந்து தாய்மொழியோடு பிசைந்து பிசைந்து விழுங்க வேண்டும் என்பது மூடத்தனம்.

2:31 AM  
Blogger வஜ்ரா said...

//
தமிழ்மணம் இருப்பது போல், தெலுங்கு மணமோ, இந்தி மணமோ இருக்கிறதா என்று தெரியவில்லை. இன்று தமிழ் மணத்தில் இத்துணை பேர் தமிழ் பதிகிறோம் என்பதே நமது மொழிக் கொள்கை நமது மொழியை காத்து வருவதற்கு சான்று.
//

http://narad.akshargram.com/

இது ஹிந்தி வலைப்பதிவுத் திரட்டி. தமிழ்மணம் போல்

நாரதர் பெயரை வைத்திருக்கிறார்கள்.

ஹிந்தி வலைப்பதிவுகள் தமிழைப் போலவே அதிகம்.

தெலுங்கு, மலையாளம் எனக்கு எழுத வராது என்பதால் என்னால் தேட முடியவில்லை.

நண்பர்களிடம் கேட்டுச் சொல்கிறேன்.

தமிழகம் தாண்டி மும்மொழிப் பாடதிட்டத்தால் தாய்மொழிக் கல்வி எவ்வாறு முன்னேறியுள்ளது என்பதைப் பார்க்கவேண்டும் என்று நீங்கள் சொல்லும் கருத்தை நான் ஏற்கிறேன்.

இன்றைய சூளலில் ஆங்கிலத் தாக்கத்தால் அனைத்து இந்திய மொழிகளும் பலவாறு இன்னல் பட்டுக் கொண்டிருக்கிறது.

தெலுங்கு தொலைக்காட்சிகளிலும் தெலுங்கைக் கொலை செய்து குதறிக் கொண்டு பேசும் TV anchor களைப் போடுவதிலிருந்தே ஓரளவுக்கு தெலுங்கின் நிலை தெரிகின்றது. (தமிழ் நாட்டில் தமிழைப் போலத்தான்).

நல்ல புத்தகங்கள் தமிழில் அறிதாகிக் கொண்டிருக்கிறது.

தமிழ் வாரப்பத்திரிக்கைகளைப் பார்த்தால் 100 க்கு 95 சதவிகிதம் அரசியலும், சினிமாவும் ஆக்கிரமித்துள்ளது. மீதியிருக்கும் 5 % த்தில் ஜோதிடம் (ரொம்ப முக்கியம்), ஆன்மீகம், இலக்கியம் (அப்படியென்று அவர்கள் சொல்லிக் கொண்டு இருப்பார்கள்), இசை, கலை அறிவியல் எல்லாம்...

அனேகமாக எல்லா இந்திய மொழிகளின் நிலையும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி தான் இந்த விஷயத்தில். ஒரு இந்திப் பத்திரிக்கையை எடுத்துப் பார்த்தால் பெரும்பாலும் அரசியலும் பாலிவுட் சினிமா செய்தியும் தான் இருக்கிறது.

தமிழ், தெலுங்கு, கன்னடம், சமஸ்கிருதம் என்று ஒவ்வொறு இந்திய மொழியாக செம்மொழியாக்கிப் pedestal ல் ஏற்றி museum த்தில் வைத்துக் கொண்டிருக்கிறோம் என்பது என் எண்ணம்.

2:33 AM  
Blogger வஜ்ரா said...

நான் என்னைப் பற்றியோ, உங்களைப்பற்றியோ சொல்லவில்லை ராகவன் அவர்களே.

இந்தியைப் படிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது. நான் தப்பித்தேன்.

கவர்மெண்ட் பள்ளிகளில் அந்த வாய்ப்பு மறுக்கப் படுகின்றது என்பது தான் என் பிதற்றலே.

இதற்கு proof வேண்டும் என்றால் இதே பதிவில் மேலே ரோசாவசந்தின் உளரலுக்கு என் பதில் உளரல் இருக்கும் அதை படித்துக் கொள்ளுங்கள். அங்கே, ஹிந்து நாளிதழ் செய்தியைக் கொடுத்துள்ளேன்.

5:24 AM  

Post a Comment

<< Home