அமானுஷ்யங்களின் அலறலில்.....
உள்ளிருந்து கதறும்
கவியுள்ளம்,
காகிதத்தில் எழுதப்பட்ட
மரபு கவிதையொன்று..
கிழித்தெறிகிறேன்..
மண்ணின் மாண்பு தெரிய
மரபு தந்தால் கொள்ளாத மக்கள்..
உயர்ந்த கவிகளை ஒளித்து விட்டேன்...
இனி என் கவிதைகள் புலம்பல்
மட்டும் செய்யும்..
தனிமையை சொல்லும்..
காதலில் கதறும்..
காமத்தை எட்டி
மறைவாய்ச் சொல்லி மகிழும்
கவிதைகள்..
அவயங்களின் அலறலை
பதிக்க பதிக்க
கூடுகிறது என் மதிப்பு கவிஞனாய்..
என் கவிதையின் உள்ளிருக்கும்
மறைபொருளை உணரமுடியாதவனா நீ..
எனில் நீ கவிஞனில்லை..
உன்னை நான் கவிஞன் என
ஒத்துக்கொள்ள புரியாவிட்டாலும்
புரிந்ததாகவாவது தலையை ஆட்டு..
எனக்கே புரியாத ஒன்றை
நான் எழுதவில்லையா....
தொடர்கிறது எனது கவிதை..
உள்ளும் புறமும் உணர்வுகளின்
மொத்தப் பிழம்பாய்,
அமானுஷ்யங்களின் அலறலில்..
நான் புதுக்கவிஞன்..
எழுதப்பட்ட என் மரபுகள்..
என் குப்பைக் கூடைக்கு மட்டும்...
2 Comments:
தங்கள் குப்பைக்கூடையில் கொஞ்சம் இடம் கிடைக்குமா எனக்கு?
நன்றி ஜீவா அவர்களே
குப்பை கூடைக்கு இனி வேலையில்லை..
கவிதைகளை வலையேற்ற உள்ளேன்..
கண்டிடுக எனது சாத்வீகன் கவிதை பக்கங்களை..
கவிதையன்பால் குப்பை கூடையில் இடம் கேட்டு என் நெஞ்சில் இடம் கொண்டீர்கள்.
நன்றி
Post a Comment
<< Home