சாத்வீகன்

எனது வானத்திற்கு கீழே...

Friday, December 29, 2006

இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்



கடந்து செல்கிறது ஓர் ஆண்டு
நடந்தனம் நாம் அதன் வழியில்..

மற்றுமோர் ஆண்டு, வரவேற்போம் மகிழ்ச்சியோடு
சுற்றமும் நட்பும் சிறக்கட்டும், வளங்கள் பெருகட்டும்.

காற்றையும் காலத்தையும் கட்டி வைப்பாரில்லை.
சுற்றும் உலகில் மாற்றமின்றி மற்றவை நிலையில்லை.

உள்ளிருக்கும் அழுக்காறுகளை உதறித் தள்ளுவோம்.
உலகமே நமது சொந்தம் என உவகை கொள்வோம்.

இருகரம் நீட்டி வருமாண்டை வரவேற்போம்..
இதயங்கள் இணையட்டும், இவ்வாண்டு சிறக்கட்டும்

இணைப்பதால்தான் இணையம் என்று பெயரிட்டோம்
இனிய தமிழ் இதயங்கள் கருத்துபரிமாறி கலக்கட்டும்.

சாற்றினேன் சாத்வீகக் கவிதைப் பாமாலை
ஏற்பீர் எமது வாழ்த்துக்களை இந்நாளில்.

இந்த ஆண்டு இனிய ஆண்டாய் சிறக்க
இல்லங்கள் யாவும் மகிழ்ச்சி பொங்க
இணையத் தமிழால் இணைந்த யாவர்க்கும்
இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்.

-சாத்வீகன்.

16 Comments:

Blogger ஜி said...

நன்றி சாத்வீகன்....

உமக்கும் இந்த இணைய நண்பனின் புத்தாண்டு வாழ்த்துக்கள்...

7:43 AM  
Blogger நாமக்கல் சிபி said...

மிக்க நன்றி சாத்வீகன்...

உமக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!

8:55 AM  
Blogger சாத்வீகன் said...

நன்றி ஜி

இந்த புத்தாண்டு தங்களுக்கு சிறந்த ஒன்றாக அமைய வாழ்த்துக்கள்.

11:40 AM  
Blogger சாத்வீகன் said...

நன்றி வெட்டிப்பயலாரே

தாங்கள் வரும் ஆண்டிலும் தொடர்ந்து நல்ல பதிவுகளை தந்து சிறக்க வாழ்த்துக்கள்.

11:42 AM  
Blogger கோபிநாத் said...

அன்பு நண்பர்
சாத்வீகன்
உங்களுக்கும் மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் என் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

12:40 PM  
Blogger சாத்வீகன் said...

நன்றி கோபிநாத்

இப்புத்தாண்டு தங்களுக்கும் தங்கள் சுற்றத்தார்க்கும் சிறந்து விளங்க வாழ்த்துக்கள்.

1:10 PM  
Blogger யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

//இருகரம் நீட்டி வருமாண்டை வரவேற்போம்..
இதயங்கள் இணையட்டும், இவ்வாண்டு சிறக்கட்டும்//

சாத்வீகன் !
உங்களுக்கும் இனிய புத்தாண்டாய் அமையட்டும்.
யோகன் பாரிஸ்

1:29 PM  
Blogger jeevagv said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சாத்வீகன்!

2:51 PM  
Blogger சாத்வீகன் said...

நன்றி யோகன்-பாரிஸ்

புத்தாண்டு வாழ்த்துக்கள். புத்தொளியை இவ்வாண்டு கொணரட்டும்.

நன்றி.

9:18 PM  
Blogger சாத்வீகன் said...

நன்றி ஜீவா

தங்கட்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
வரும் ஆண்டு வளம் பெற்று மலரட்டும்.

9:21 PM  
Blogger மணியன் said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

10:44 PM  
Blogger சாத்வீகன் said...

நன்றி மணியன்
தங்களுக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்ள்.

10:24 AM  
Blogger வெற்றி said...

சாத்வீகன்,
உங்களுக்கும் என் உளம் கனிந்த ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

11:22 AM  
Blogger சாத்வீகன் said...

நன்றி வெற்றி

இப்புத்தாண்டு தங்கட்கும் தங்கள் சுற்றத்தார்க்கும் எல்லா நலமும் கொணரட்டும்.

2:15 PM  
Blogger Unknown said...

தாமதமானப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!
தைத்திருநாளுக்கு முன்கூட்டியே வாழ்த்தி விடுகிறேன் :))

வாழ்வில் வளமும் நலமும் பெருகட்டும்!!!

5:13 AM  
Blogger சாத்வீகன் said...

நன்றி அருட்பெருங்கோ.

காதல் கவிமழையே, தங்களுக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்.

6:52 AM  

Post a Comment

<< Home