கவிதையல்லாத கவிதைகள்
1
அதோ பார் நிலா. இல்லை சூரியன்.
வா அருகே சென்று பார்ப்போம்.
விழுந்து இறந்தன விட்டில் பூச்சிகள்.
2
அப்பாடா இன்று ஓய்வு.
சே இந்த பூனை மட்டும்.
ஏழை வீட்டு அடுப்பு.
3
தவளைகள் சத்தம் இன்று அதிகம்.
மழைக்காலமா என்ன ?
இல்லை வருகிறது தேர்தல்.
4
நட்சத்திரங்கள் கண்சிமிட்டின..
எத்துணை அழகாயிருக்கிறது
இந்த குடிசையின் கூரை.
5
இரும்புக் கதவுகள் இழுத்துப் பூட்டப்பட்டன...
காவலுக்கு தடிக் கம்புகளும் கத்திகளும்..
தன்னை காப்பாற்றி கொள்ள முடியா கடவுளின் சிலை.
6
கண்ணன் பிறந்தது காராக்கிரகம்.
எனக்கும் அஃதே சுகம்.
சிறையில் போலிச் சாமியார்.
7
நீயன்றி என் வாழ்க்கைக்கு அர்த்தம் இல்லை.
தேடிக்கொண்டு இருக்கின்றேன். எங்கு சென்றாய்.
இங்கனம் உனது ஜோடியாகிய செருப்பு.
8
எத்தனை உதறிய பின்னும்
எழுத மறுக்கிறது என் பேனா.
கவிதையல்லாத கவிதைகள்.
10 Comments:
enna kavithai ezhuthireenga..
intha kavithai maathiri varumaa..
pottu thaakku...
vara puttu era...
pottu thaakku...
vanga kadal sura...
pottu thaakku...
வருக ஜி..
போட்டு தாக்கும் அந்த கவிதை சிறந்த கவிதையே.
அக்கவிதையின் தாளக் கட்டில் நூற்றில் ஒரு பங்கு கூட வராத நமது வார்த்தைக் குவியல்கள் இங்கு கவிதையல்லாத கவிதையாக மட்டுமே நிற்கின்றன.
நன்றி.
:)))
மிகவும் நன்றாக இருந்தது...கவிதையில்லாத கவிதைகள்..
வாழ்த்துக்கள்.
நல்லாயிருக்கு. வாழ்த்துக்கள்
இரண்டாவதைத் தவிர மற்றவை எல்லாம் புரிந்தன சாத்வீகன்.
நன்றி தம்பி, தமிழ்ப்பிரியன், விஜயன்.
குமரன்..
எரியாத அடுப்பு.
அதில் தூங்கும் பூனை.
நன்றி.
சொல்லாமல் சொல்லும்
கவிதையல்லாத கவிதைகள் நன்று!
வாழ்த்துக்கள் அகத்தியன்!
எல்லாமே நல்ல கவிதைகள். ஆனாலும்
அதோ பார் நிலா. இல்லை சூரியன்.
வா அருகே சென்று பார்ப்போம்.
விழுந்து இறந்தன விட்டில் பூச்சிகள்.
எனக்கு இது நன்றாகப் பிடித்தது.
பாராட்டுக்கள்!
Post a Comment
<< Home