சாத்வீகன்

எனது வானத்திற்கு கீழே...

Monday, January 15, 2007

3007ம் ஆண்டும் சுஜாதாவின் சிறுகதையும்...


(இது நகைச்சுவை பகுதியில் வரவேண்டிய விஞ்ஞான சிறுகதை.... )

"திஸ் ஈஸ் சம்திங் இன்டரஸ்டிங்..." கிருஷ் விர்சுவல் நெட்டில் தடவிக்கொண்டிருந்தான்..

"வாட் ??" இது கலை....

"யூ சீ. எக்சாட்லி 1000 ஹியர்ஸ் அகோ... எ ஸ்டோரி கிரியேட்டட் கிரேட் ஹிஸ்டரி"...

"வாட் ஈஸ் தட்"..

"சம் ரைட்டர் ஸோ கால்டு சுஜாதா ஹேஸ் ரிட்டன் எ ஸ்டோரி... இட் காட் மிக்சட் ரெஸ்பான்சஸ்"..

"இன் வாட் லாங்குவேஜ்.."

"இன் டமில்...".

"ஹோ.. த லாங்குவேஜ் தட் அவர் பொலிட்டீசியன்ஸ் யூஸ் டு கேதர் வோட்ஸ்"..

"நோ.. தமிழ் என்னவொரு அருமையான மொழி தெரியுமா... நமது முன்னோர்களின் மொழி. ஒரு ஆர்வத்தில் நான் அதை கற்றுக்கொண்டிருக்கிறேன்..."

"பாட்டிதான் தமில் கத்து.. கத்துன்னுதுன்னா... யூ டூ?"

"இந்த ஸ்டோரி பார். ஆச்சரியம் இதில் இருக்கும் இருவர் பெயரும் நமது பெயராக இருக்கிறது.
ஆச்சரியமாக இல்லை. இதில் சாதி பிரச்சனையால் அயோத்தியா மண்டபம் தாக்கப்பட்ட கதை எழுதப்பட்டுள்ளது."

"அயோத்தியா மண்டபம்."

"ஆம். சென்னையின் மிகச்சிறந்த இடம். கட்டடக்கலையின் உச்சம். இது சாதி காழ்ப்பால் தாக்கப்பட்ட வரலாற்றை நீ வரலாற்று புத்தகத்தில் படித்திருப்பாய்.."

"ப்ச்... ஐ டோன்ட் ரிமம்பர்.."..

"2006-07ம் ஆண்டுவாக்கில் இது தாக்கப்பட்டதாக நான் படித்திருக்கிறேன். இந்த கதை அப்போது தாக்கப்பட்ட ஒரு பெரியவரை பற்றியது. அவர் சாதி காரணமாக தாக்கப்பட்டார் என்று இந்த கதை சொல்கிறது."

"சாதி.. வாட் ஈஸ் இட்.."

"சாதி மீன்ஸ்... கேஸ்ட்... இட் நோ லாங்கர் எக்ஸிஸ்ட்ஸ்"...

"கேஸ்ட்... ஐ டோண்ட் அண்டர்ஸ்டாண்ட்"..

"இட் கம்ஸ் பை பர்த் தே சே. அப்பர் கேஸ்ட்.. லோயர் கேஸ்ட்... சம் பீப்பிள் டெஸ்டைன்டு டு பி சப்ரஸ்டு பை அதர் செக்ட்ஸ் ஆஃப் பீப்பிள்".

"ஐ ஈவன் கேன்ட் இமாஜின் தட்.."

"திஸ் ஸ்டோரி ஹேஸ் ஸம்திங் டு டூ வித் தட் கேஸ்ட்.."

"ஈஸ் திஸ் ஸ்டோரி தட் கிரேட் ஸ்டோரி..."

"திஸ் ஸ்டோரி ஈஸ் ரியல் ட்ராஷ். பட் ஐ யம் வொண்டரிங் அபவுட் தி ஹைப் இட் கிரியேட்டட்"

"வாட்"

"யூ ஸீ... ஐ சர்ச்டு விர்ச்சுவல்நெட் ஃபார் வள்ளுவர் ஐ காட் ஒன்லி 1000000 ரிசல்ட்ஸ். பட் ஃபார் "சுஜாதா அயோத்யாமண்டபம்" ஐ காட் 5000000 ரிசல்ட்ஸ்."

"ரியல்ல்லி... தன் திஸ் சுஜாதா மஸ்ட் பி தி கிரேட்டஸ்ட் ரைட்டர் எவர் இன் டமில்".

"எஸ். இட் ஸீம்ஸ் ஸோ. திஸ் ஸ்டோரி கேம் இன் மாகசின் கால்டு குமுதம். நெள ஒன்லி டூ இஷ்யூஸ் ஆஃப் திஸ் புக் ஆர் அவய்லபிள். ஒன் இன் அவர் மியூசியம். அனதர் கான் ஃபார் 1000000 டாலர்ஸ் இன் ஆக்சன் லாஸ்ட் வீக்"

"ஓக்கே. இனஃப்.. வாட் ஆர் யூ கோயிங் டு டூ நெள ?" அவள் பார்வையில் ஒரு கிறக்கம் இருந்தது.

"ஐ அம் ரீடிங் ரெவ்யூஸ் ஆஃப் திஸ் ஸ்டோரி...."

"ஸ்டுபிட்... யூ ஸ்டில் வான்டு டூ கன்டின்யூ திஸ் சில்லி ரீடிங்....."

இருவர் கண்களும் சந்தித்தன.

சற்று நேரத்தில் விளக்கு மற்றும் விர்ச்சுவல் நெட் அணைக்கப்பட்டது.

"தேர் ஈஸ் நோ கேஸ்ட்ஸ். ஆக்சுவலி ஒன்லி மென் அண்டு விமென்".

"நாட் ஈவன் தட் டூ. தேர் ஈஸ் நோ டிஃபரன்ஸ் அட் ஆல்".

இருந்த அந்த கடைசி டிஃபரன்ஸ் கூட அந்த நேரத்தில் காணாமல் போய்க்கொண்டிருந்தது.

---------------------- ----------------------------------------------------

(கதையை படிச்சு முடிச்சதும்... கலை என்ன சாதி... கிருஷ் என்ன ஜாதி அப்படின்னு ஆராய்ச்சிக்கண்ணோட பார்க்கின்ற எனதருமை மக்களே..
ஆயிரம் வருஷம் ஆயிருச்சிய்யா... சாதி இப்ப உங்க பார்வையில மட்டுந்தாய்யா இருக்கு. நன்றி....)

10 Comments:

Anonymous Anonymous said...

இது எந்த சைடுன்னே தெரியலியே :))))

11:40 AM  
Blogger சாத்வீகன் said...

அனானி...

இது நடுநிலை என்று நான் நம்புகிறேன்.

நடுநிலை என்று ஒன்று கிடையவே கிடையாது என்று நண்பர் ஒருவர் சொன்னது ஏனோ நினைவிற்கு வருகிறது.

எனவே... எந்த நிலைப்பாடு இதில் இருக்கின்றது என்பதை தங்களிடமே விட்டுவிடுகிறேன்.

நன்றி.

12:21 PM  
Anonymous Anonymous said...

// இது நடுநிலை என்று நான் நம்புகிறேன்.

நடுநிலை என்று ஒன்று கிடையவே கிடையாது என்று நண்பர் ஒருவர் சொன்னது ஏனோ நினைவிற்கு வருகிறது. //


ஆமாம், ஒரு கருத்தை எதிர்த்து எதுவும் எழுதப்படவில்லை என்றால் ஆதரவு அளிப்பதாகத்தான் பொருள் கொள்ள வேண்டுமா ?

10:29 PM  
Blogger ரவி said...

கலக்கல்....:))))))))

11:23 PM  
Blogger சாத்வீகன் said...

அனானி2...
//ஆமாம், ஒரு கருத்தை எதிர்த்து எதுவும் எழுதப்படவில்லை என்றால் ஆதரவு அளிப்பதாகத்தான் பொருள் கொள்ள வேண்டுமா ?//

சரியான கேள்வி. எல்லோருக்கும் எல்லாவற்றையும் ஆதரித்தோ எதிர்த்தோ எழுத நேரமிருப்பதில்லை....

மாற்றுக் கருத்து வைக்க நினைத்து அதனால் பயனில்லை என்ற புரிதலில் அமைதியாக சென்று விடலாம்.. அவ்வாறு செல்பவர்கள்தான் அதிகம் என்று நினைக்கிறேன்.

நல்ல கருத்து என்று மனதில் நினைத்துக்கொண்டு அமைதியாக செல்பவர்களும் உண்டு.

இந்த இரு வேறு கருத்துக்களும் ஒருவர் மனதில் தோன்றக்காரணமாக இருப்பது எது என்பதுதான் என் கேள்வி... நிச்சயமாய் பதிவு இல்லை.. படிப்பவரது பின்னணி.. பின்னணியை பின்னுக்கு தள்ளிவிட்டு வாருங்கள்... சுயமாய் சிந்தியுங்கள். சமுதாயம் தானாய் மாறும்.

11:27 PM  
Blogger சாத்வீகன் said...

நன்றி செந்தழலாரே..

11:45 PM  
Blogger G.Ragavan said...

நல்லாயிருந்தது கதை. ஒரு தவறை எதிர்ப்பதற்காக இன்னொரு தவறை ஆதரிக்க முடியாது. கூடாது. தவறு என்று நாம் நினைப்பதை யார் செய்தாலும் கண்டிக்க வேண்டும். அதுதான் நேர்மை.

1:10 AM  
Blogger ஓகை said...

சாத்வீகன், நல்ல கற்பனை.

1:19 AM  
Blogger சாத்வீகன் said...

வருக ராகவன்...

//ஒரு தவறை எதிர்ப்பதற்காக இன்னொரு தவறை ஆதரிக்க முடியாது. கூடாது.//

மிகச் சரி.

// தவறு என்று நாம் நினைப்பதை யார் செய்தாலும் கண்டிக்க வேண்டும். அதுதான் நேர்மை.
//

நேர்மையான எதிர் கருத்துக்களை வேண்டுமானால் சொல்லலாம். கண்டிக்க நாம் யார்.

ஒன்றிரண்டு கருத்துப் பதிவுகளோடு நிறுத்திக்கொள்ளாமல் தினமும் கண்டன அறிக்கைகள் வெளியிட வேண்டிய தேவை நமக்கு இல்லை என்று நினைக்கிறேன். :))

8:20 PM  
Blogger சாத்வீகன் said...

நன்றி ஓகை.

8:21 PM  

Post a Comment

<< Home