சாத்வீகன்

எனது வானத்திற்கு கீழே...

Saturday, January 20, 2007

அணிலின் கோடுகளும் ஆட்டின் தாடியும்.

முன்னொரு காலத்தில் முதன் முதலில் தோன்றிய ஆட்டுக்கு தாடி இல்லை.
அதன்பிறகு வந்த ஆடுகளும் அப்படியே. ஆடுகளுக்கு மற்ற உயிரினங்களை பார்க்கும் போது தாங்கள் அழகாக இல்லை என்ற எண்ணம் அதிகமாகியது.

சிங்கத்தின் பிடரி.
சிறுத்தையின் புள்ளிகள்.
புலியின் கோடுகள்.
காண்டா மிருகத்தின் கொம்பு.
யானையின் தந்தம்.
மயிலின் தோகை.
கிளியின் மூக்கு.
அணிலின் கோடுகள். (இந்த கதைப்படி அணிலுக்கு ஆரம்பத்திலேயே கோடுகள் இருந்தன.)

அனைத்தையும் அழகாக படைத்த ஆண்டவன் தங்களை அழகாக படைக்கவில்லையே என்ற எண்ணம் ஆடுகளை ஆட்டிப்படைத்தது.
ஆடுகள் எல்லாம் சேர்ந்து தவமிருந்தன. ஆடுகளின் தவம் ஆண்டவனை எட்டியது.
அனைவருக்கும் அருளும் ஆண்டவன் ஆடுகளுக்கு அருள மாட்டானா என்ன.

ஆண்டவன் ஆடுகளின் முன் பிரத்யட்சமானார்.
"ஆண்டவரே எம்மை அழகாக்குவீராக". ஆடுகள் முறையிட்டன.
ஆண்டவன் ஆடுகளை எவ்வாறு அழகாக்குவது என்று யோசிக்க தொடங்கினார்.
தமது தாவாங்கட்டையிலிருந்த கருகரு தாடியை தடவியபடி யோசனையில் ஆழ்ந்தார்.

அதைப்பார்த்த ஆடுகள் ஆகா. ஆண்டவனின் அறிவு அந்த தாடியில்தான் இருக்கிறது போலும். அதனால்தான் அவர் அதை தடவியபடி யோசிக்கிறார் என்று எண்ணின.

"ஆண்டவனே. எமக்கு உம்மைப்போல் தாடியொன்றை தந்தருளும்" என்று அவை கோரிக்கை வைத்தன.

அன்று முதல் ஆடுகளின் தாடை தாடியால் அலங்காரம் பெற்றது.

ஆனால் என்ன ஆடுகளால் தாடியை தடவியபடி யோசிக்க முடியவில்லை.
அதற்கு பதிலாக அவை தாடையை ஆட்டியபடி அசைபோடுகின்றன.

நீதி: ஆட்டின் தாடி அழகானது அணிலின் கோடுகளைப் போல.

(இது சிறுவர் கதை.. இந்த கதை எந்த சமீபத்திய நிகழ்வுடனும் தொடர்புடையது அல்ல)

8 Comments:

Blogger சிறில் அலெக்ஸ் said...

//(இது சிறுவர் கதை.. இந்த கதை எந்த சமீபத்திய நிகழ்வுடனும் தொடர்புடையது அல்ல)//

:))

6:55 PM  
Blogger கோவி.கண்ணன் [GK] said...

:)
நல்ல நீதிக் கதை !
தொடர்ந்து கலக்குங்கள் !

7:43 PM  
Blogger ஜி said...

பி.கு. போடாமலேயே பி.கு. அசத்தல்...

9:03 PM  
Blogger சாத்வீகன் said...

சிரிப்பை சிந்தி சென்றமைக்கு நன்றி சிறில் அலெக்ஸ். :))

9:50 PM  
Blogger சாத்வீகன் said...

நன்றி கோவி. கண்ணன்.

10:01 PM  
Blogger சாத்வீகன் said...

நன்றி ஜி..

பி.கு. போடப்பட்டுள்ளது. பின் குறிப்பல்ல பிராக்கெட் குறிப்பு.

:))

10:11 PM  
Anonymous Anonymous said...

அப்ப ஆட்டு தாடியும் அணில் கோடும் ஒண்ணா ?

11:56 PM  
Blogger சாத்வீகன் said...

அனானி கதையின் நீதியை மீண்டும் படிக்கவும். :))

12:15 AM  

Post a Comment

<< Home